சாலையாக இருந்தாலும் வாக்குவாதமாக இருந்தாலும் மோதலைத் தவிர்த்திடுங்கள்.
தோல்வி அச்சத்தை வென்றாலே ெவற்றி தொடங்குகிறது என்று அர்த்தம்.
தொடர்ந்து செயல்படுங்கள். செயல் மேன்மை நிகழும். குறைகள் தாமாகவே அகலும்.
ஒன்றைத் தொடங்க நீங்கள் தாமதித்தால் இன்னொருவர் தொடங்கிவிடுவார்.
தயக்கத்தின் காரணங்களைப் புரிந்றுகொள்ளும்போது தயக்கம் தவிடுபொடியாகிறது.
வாய்ப்புகளின் ஆரம்பம் என்பது முயற்சியின் ஆரம்பத்தில் இருக்கிறது.
தேடிவரும் வாய்ப்புகளை ஏற்க மறுப்பவன் ஏமாளி. ஏற்று இழப்பவன் கோமாளி.
நம்மால் எப்போதும் உதவி செய்ய முடியாது. ஆனால் எப்போதும் இதமாகப் பேச முடியும்.
உலகின் மிகப்பெரிய சொத்து ஆர்வம்தான். அது பணம், பதவி, செல்வாக்கு அனைத்தையும் முறியடிக்கும் ஆற்றல் கொண்டது.
காலம் நதியைப் போன்றது. உற்பத்தியாகும் இடத்திற்கு அது திரும்பவே திரும்பாது.
திட்டமிடுதல், தயாரிப்பு, கடின உழைப்பு இவற்றிலிருந்தே வெற்றி பிறக்கிறது. வெற்றிக்கென தனி ரகசியம் கிடையாது.
நீங்கள் செய்யும் பணிகளை உளமார நேசித்துச் செய்யுங்கள். நீங்கள் எட்ட வேண்டிய உயரங்களை நிச்சயமாக அடைவீர்கள்.