Mas Sehat | Blog Tentang Kesehatan | Mas Sehat ~ Blog Tentang Kesehatan | www.mas-sehat.com
Sekar_Swiss

வீட்டு மருத்துவ குறிப்புகள்


• நெல்லி வற்றல்- சந்தனத்தூள்- கொத்தமல்லி மூன்றையும் தண்ணீரில் ஊற வைத்தபின் வடிகட்டி அந்த நீரை அருந்தி வந்தால் தலை சுற்றல், கிறுகிறுப்பு முதலியன குறையும்.    

• வெல்லத்தை கெட்டியாகப் பாகு வைத்து அதில் மிளகை ஒன்றிரண்டாகப் பொடித்துப் போட்டு உருட்டி வைத்தால் இருமல் வரும்போது வாயில் அடக்கிக் கொள்ள இருமல் நிற்கும்.    

• மண் சட்டியில் உப்பை வறுத்துத் துணியில் கட்டி உப்பு ஒத்தடம் இரண்டு மூன்று வேளை கொடுத்தால் கழுத்து வலி நீங்கிவிடும்.  

• வயலட் நிறமுள்ள பிஞ்சு கத்தரிக்காய், கருஞ்சிவப்பு நிறமுள்ள பசலைக் கீரை, சிவப்பு பொன்னாங்கண்ணிக் கீரை இவற்றில் அயோடின் சத்து அதிகம் உள்ளது. இவற்றை அதிகமாகக் குழையவிடாமல் சாப்பிட்டு வர சிறுநீர் போகும்போது ஏற்படும் எரிச்சல் நீங்கிவிடும். 

• நூல்கோலைத் துருவி ஊறவைத்து பயத்தம் பருப்பு கலந்து உப்பு பிசறி எலுமிச்சைச்சாறு பிழிந்து சாப்பிட்டால் சர்க்கரை நோய்க்கு அருமருந்தாகும்.   

• தேங்காய் எண்ணெயை மிதமான தீயில் வைத்துக் காய்ந்ததும் வேப்பிலையைப் போட்டு பொரித்து எடுத்துவிடவும். கொத்தாகக்கூடப் போடலாம். பிறகு இறக்கி வைத்துக் கொஞ்சம் வெந்தயம் போட்டு மூடிவைக்கவும். இந்த எண்ணெய்யைத் தலையில் தடவிவந்தால் வெயிலால் வரும் உடல் சூடு குறையும். வெப்ப நோய்கள் தாக்காது.  

• வயிற்றில் பிரச்னை ஏற்பட்டால் கொஞ்சம் சீரகத்தை எடுத்து கொதிநீரில் போட்டு கஷாயமாக இரண்டு வேளை குடித்து வர நிவாரணம் கிடைக்கும். 

• மாதுளைச் சாறு தினமும் குடித்து வந்தால் ரத்த அழுத்தம், கொழுப்பு, நச்சுத்தன்மை என பல பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும்.    

• பொடி செய்த ஓமத்தை பாலில் கலந்து வடிகட்டி படுக்கும் முன் குழந்தைகளுக்குக் கொடுத்தால் சளியை தூர விரட்டும்.    

• திராட்சையை பன்னீரில் ஊறவைத்துச் சாப்பிட்டால் இதயம் பலம் பெறும். தொடர்ந்து திராட்சை உண்பவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி நிச்சயம். 

• குழந்தைகள் ஞாபகசக்தியுடன் இருக்க வேண்டுமானால் தினமும் காலை உணவுக்குப் பின் வெந்நீரில் ஒரு தேக்கரண்டி தேன் கலந்து குடிக்க வையுங்கள்.    

• சின்ன வெங்காயத்தை சிறிது எண்ணெய்விட்டு வதக்கவும். வெறும் வயிற்றில் தினமும் ஐந்தாறு என்ற கணக்கில் இரண்டு வாரங்கள் சாப்பிட்டு வர நரம்புத் தளர்ச்சி குணமாகும். உடலும் குளிர்ச்சியடையும்.